ஹீரோவாக அறிமுகமாகும் காமெடி நடிகர் ஜார்ஜ் மகன்.! வைரல் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக குணசத்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து வருபவர் தான் நடிகர் ஜார்ஜ் மரியன். இவர் 1989ஆம் ஆண்டு நாடகத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் அதன் பிறகு 2002ஆம் ஆண்டு வரையிலும் தொடர்ந்து நாடகத்தில் நடித்து வந்தார் பிறகு இதன் மூலம் தமிழ் சினிமாவில் துணை மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

அப்படி பிரியதர்ஷினி காஞ்சிவரம் படத்தில் ஜார்ஜ் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்த நிலையில் இந்த படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு இவர் ஏ.எல்.விஜய் சொந்த முயற்சியினால் இயக்கியிருந்த பொய் சொல்ல போறோம் என்ற திரைப்படத்தில் ஜார்ஜ் நடிக்க வைத்தார். இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த மதராசப் பட்டினம் படத்தில் ஆசிரியராக நடித்திருந்த நிலையில் இவருடைய கேரக்டர் அந்த படத்தில் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்குப் பிறகு தொடர்ந்து தெய்வத் திருமகள், சைவம், கலகலப்பு, விசுவாசம், நிமிர், கலகலப்பு 2, மண்டேலா, கைதி என அடுத்தடுத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இப்படி சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் இவருடைய மகனும் சினிமாவில் நடித்துள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இவருடைய மகன் பிரிட்டோ தற்பொழுது ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார் அது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாக தொடங்கியுள்ளது.

Brito
Brito

இவ்வாறு நடிகர் ஜார்ஜ்க்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டோ குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இவர் நடிக்கப் போகும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment