முதன்முதலாக தனது மகளை மீடியாவிற்க்கு அறிமுகப்படுத்திய நடிகர் விவேக்!! வைரலாகும் புகைப்படம்.

comedian actor vivek dauhgter photo:நகைச்சுவை தான் ஒரு திரைப்படத்திற்கு மிக முக்கியம். அதனாலயே இன்றும் நடிகர்கள் தனது திரைப்படத்திற்கு ஒரு நல்ல காமெடியன் வேண்டுமென தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கின்றனர். விவேக் தனது தனிச்சறப்பான காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

விவேக் காமெடி மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் கருத்து உள்ளதாக இருக்கும். விவேக் அவர் செய்யும் நகைச்சுவையில் ஏதேனும் ஒரு கருத்தினை புகுத்தி உலகிற்கு சொல்லியிருப்பார். இதனாலேயே இவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் ஒவ்வொரு காமெடியிலும் சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை கூறியிருப்பார்.இதனாலேயே அப்துல்கலாம் அவர்களுக்கு இவரை மிகவும்  பிடிக்குமாம். நடிகர் விவேக் அப்துல் கலாம் சொன்னது போல இன்றும் அவர் மரம் வளர்த்து வருகிறார்.

மேலும் நடிகர் விவேக்கிற்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் அமிர்த நந்தினி., இளையமகள் தேஜஸ்வனி, இவரது மகன் பிரசன்னா குமார் மூளை காய்ச்சல் ஏற்பட்டு இறந்துவிட்டார். மேலும் தற்போது விவேக்கும் அவரது மூத்த மகள் அமிர்தநந்தினியும் இணைந்து தனது மகன் பிரசன்னா குமாரின் பெயரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர்.

தனது  மகளை மீடியாவிற்கு காட்டாத இருந்த விவேக் அவர்கள்  தான் நடத்தும் டிரஸ்ட் ஒன்றுக்காக தொலைக்கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அறிமுகப்படுத்தினார். இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகள் இருந்தும் இதுவரை மீடியாவில்  காட்டாத விவேக்கை புகழ்ந்து வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்.

vivek
vivek
vivek daughter1
vivek daughter1

Leave a Comment