முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியா இது.? தற்போது எப்படி உள்ளார் பாருங்கள்.

Comedian actor venniradai Moorthy who plays with leading actors: நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி 1965ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் வக்கீலுக்கு படித்திருந்தாலும் நடிப்பின் மீது கொண்ட தீராத ஆசையினால் படங்களில் நடிப்பதையே நோக்கமாகக் கொண்டார்.

இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து காமெடியில் கலக்கி  வந்தார் என்பதை அனைவரும் அறிந்ததே. இவர் சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த்,  அஜித், விஜய் போன்ற அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் குணச்சித்திர வேடம் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் திரையுலகில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு வயதான காரணத்தினால் தொடர்ந்து திரைப்படங்களில்  நடிக்க முடியாததால் கடந்த இரண்டு வருடமாக  ஓய்வு பெற்றார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் தனது 83 ஆவது பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

வயதாகி போனதால் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன வெண்ணிறாடை மூர்த்தியை பார்த்து ரசிகர்கள் காமெடி நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி இவர் என அதிர்ச்சியில் உள்ளனர். தற்போது இவரின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

venniradaimoorthy-tamil360newz

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment