புதிய காதல் ஜோடிகளின் சீரியலை திடீரென முடிக்க முடிவெடுத்த கலர்ஸ் தமிழ்.! சோகத்தில் ரசிகர்கள்..

0
colors-tamil
colors-tamil

பொதுவாக தற்பொழுதுள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் கலர் தமிழ் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் தற்போது திடீரென பிரபல சீரியலை விரைவில் முடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலங்களாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புது புது வித்தியாசமான தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அப்படி சமீபத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற சீரியல் தான் அபி டெய்லர். இந்த  சீரியலில் முக்கிய ஜோடிகளாக ரேஷ்மா, மதன் இருவரும் நடித்திருந்தனர்.

இதற்கு முன்பு இவர்கள் இருவரும் இணைந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த பூவே பூச்சூடவா சீரியலில் நடித்திருந்தார்.இதன் மூலம் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதால் இருவரும் பெற்றோர் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.மேலும் இந்த ஜோடிகள் தங்களுடைய சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்கள்.

abi deiler
abi deiler

அபி டெய்லர் சீரியலில் அபி என்ற பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை மையப்படுத்திய கதை இதற்கு அசோக் உறுதுணையாக இருக்கிறார் அபி ரோலில் ரேஷ்மாவும், அசோக் ரோலில் மதனும் நடித்து வருகிறார்கள். இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது மேலும் ரேஷ்மா மற்றும் மதன் திருமணத்திற்கு பிறகு நடித்த முதல் சீரியல் இதுதான்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது வரும் 20ஆம் தேதி உடன் இந்த சீரியல் முடிய இருப்பதாக கலர்ஸ் தமிழ் அறிவித்துள்ளது ஏனென்றால் இதற்கு முக்கிய காரணம் இந்த சீரியல் பிரைம் டைமில் ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது தான் புதிதாக தொடங்கப்பட்ட பச்சைக்கிளி சீரியலுக்கு இந்த சீரியலின் நேரம் மாற்றப்படுகிறது இதனால் அபி டெய்லர் சீரியல் டிஆர்பி குறைந்துள்ளது எனவே இந்த சீரியலை முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.