தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்பொழுது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் தனக்கான ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
இந்த படத்தினை அடுத்து தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் பல வருடங்கள் கழித்து இந்த படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு நடிகர் விஜய் தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தாலும் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இவருடைய படங்கள் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை. எனவே தொடர்ந்து தன்னுடைய அப்பா சந்திரசேகர் இயக்கிய படங்களில் நடித்து வந்த விஜய் இது சரிப்பட்டு வராது என தன்னுடைய முயற்சியினால் பலப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.
அந்த வகையில் இவருடைய முயற்சியும் வெற்றி பெற தொடங்கிய நிலையில் பிறகு தானாகவே கதையைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்த நிலையில் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற தொடங்கியது. அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களினால் தான் இவர் வெற்றினை கண்டார். அந்த வகையில் ஒரு படம் நான் காதலுக்கு மரியாதை.
இந்த படம் 1997ஆம் ஆண்டு ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஷாலினி நடித்த நிலையில் இவரை அடுத்து இன்னும் ஏராளமான பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர் அந்த வகையில் இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 200 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய நிலையில் ரூ.2 கோடி பட்ஜெட்டில் உருவாகி வெற்றிகரமாக ரூபாய் 15 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இவ்வாறு நடிகர் விஜயின் சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான படம் காதலுக்கு மரியாதை என கூறலாம்.