இதுவரை திருமணம் செய்யாமல் இருக்கும் கோவை சரளா.! காரணம் என்ன தெரியுமா.?

0
kovai sarala
kovai sarala

தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகளில் தற்பொழுது உள்ள இளம் நடிகைகள் மற்றும் முன்னணி நடிகைகள் என்று அனைவருக்கும் உதாரணமாகத் திகழ்பவர் நடிகை கோவை சரளா.  இவர் வடிவேலு,கவுண்டமணி,செந்தில் என்று இவர்கள் நடிக்கும் காலகட்டத்தில் இருந்தே கோவை சரளாவும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிக்கும் காலகட்டத்தில் இருந்து வந்த அனைத்து முன்னணி காமெடி நடிகர்களுக்கு மிகவும் டப் கொடுத்து வந்தார். தற்போது இவர் குணச்சித்திர நடிகையாகவும், அம்மா கேரக்டரிலும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

விஜயகுமார் மற்றும் கே ஆர் விஜயா ஆகியோர்கள் நடிப்பில் வெளிவந்த வெள்ளி ரகம் படத்தின் மூலம் தான் கோவை சரளா சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். இதனைத் தொடர்ந்து இவரின் சிறந்த நடிப்பை பார்த்து ஏராளமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் இதுவரையிலும் எந்த நடிகையும் கோவை சரளா போல் நடித்திருக்க மாட்டார்கள்.ஏனென்றால் இவர் தனது 16 வயதில் சின்ன வீடு திரைப்படத்தில் பாக்கியராஜின் 65 வயது அம்மாவாக நடித்து திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இப்படிப்பட்ட இவர் தனது 15 வயதில் நடிக்க ஆரம்பித்து  தற்போது வரையிலும் இவர் 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கோவை சரளா எந்த சர்ச்சையிலும் பெரிதாக மட்டவில்லை ஆனால் இன்று வரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன் என்ற ஒரு கேள்வி இருந்து வருகிறது.

அந்த வகையில்  கோவை சரளாவிற்கு மொத்தம் நான்கு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரராம் எனவே இவர்களின் திருமணத்திற்காகவும்,படிப்பிற்கும் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தனது குடும்பத்தின் மீது கவனம் செலுத்தி வந்தான். இவ்வாறு கோவைசரலா தனது குடும்பத்திற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளார்.