கோவைக்காய் இலையின் மருத்துவ குணங்கள் இவ்வளவு நாள் தெரியாமல் போய் விட்டதே

0

கோவை இலையின் முழு செடியும் மருத்துவ குணங்கள் கொண்டது. இது மிகவும் குளிர்ச்சியாக தாவரம் ஆகும். இது காய்ச்சல் முதல் சிறுநீர் மற்றும் வியர்வையை பெருக்கும் அதுமட்டுமல்லாமல் மலச்சிக்கலை சீராக்கும்.கோவை இலை சொறி சிரங்கு உடல் சூடு நீர் சுளுக்கு போன்றவற்றை குணப்படுத்தும்.

கோவைக்காய் ஜலதோசம் நீரழிவு போன்ற நோய்களையும் குணப்படுத்தும். இதன் வேர் குஷ்டம் வாதநோய் இவற்றுக்கு மருந்தாகும்.கோவைக்காயில் சாம்பார் கூட்டு பொரியல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் வாய்ப்புண் உதடு வெடிப்பு ஆகியன குணமாகும்.

கோவைக்காய் இலை சாரை சம அளவு தேங்காய் எண்ணையுடன் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கொண்டு மேற்பூச்சாக பூச வேண்டும். இவ்வாறு தடவினால் சொறி சிரங்கு போன்றவை குணமாகும்.