விக்ரமின் கோப்ரா போஸ்டரை கிண்டல் செய்த ரசிகருக்கு விஜய்யின் பிகில் புகைப்படத்தை வெளியிட்டு தக்க பதிலடி கொடுத்த இயக்குனர்.!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் தன்னையே அர்ப்பணித்தவர், இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனித்துவம் தெரியும் அந்த அளவுக்கு இவரின் திரைப்படம் இருக்கும், என்னதான் இவர் திரைப்படம் ஒவ்வொன்றும் தனித்தனியாக தெரிந்தாலும் வசூலில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்து விட்டது.

இந்த நிலையில் இந்த சறுக்கலில் இருந்து மீண்டு வருவதற்காக விக்ரம் தற்போது இமைக்கா நொடி புகழ் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய திரைப்படமான கோப்ரா படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது படத்திற்கு கோபுர என பெயர் வைத்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது, இதில் விக்ரம் பல கெட்டப்களில் இருந்தார் இந்த போஸ்டரை பார்த்த சில ரசிகர்கள் இப்படிதான் ராஜபட்டை வந்தது ஆனால் படம் தோல்வியடைந்தது என கிண்டல் செய்தார்கள்.

இது விக்ரம் ரசிகர்ககளுக்கு இடையே  கோபத்தை அதிகரித்தது அதனால் கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து விடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதனால் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து விஜய்யின் பிகில் பட போஸ்டரை வெளியிட்டு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Comment