விக்ரமின் கோப்ரா எப்படி இருக்கு..! இதோ ட்விட்டர் விமர்சனம்

நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரம் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக இன்று வெளியாகி உள்ளது கோப்ரா திரைப்படம் இந்த திரைப்படத்தை டிமான் காலனி,  இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் இயக்கியுள்ளார். சமீப காலமாக இளம் இயக்குனர்கள் திரையில் சாதித்து வருகிறார்கள் அந்த வகையில் அஜய் ஞானமுத்துவும் தன்னுடைய மூளையை கசக்கி கோப்ரா திரைப்படத்தின் மூலம் மீண்டும் பெஸ்ட் இயக்குனர் என நிரூபித்து விட்டார்.

ரசிகர்களின் விமர்சனங்களை இங்கே காணலாம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய கோப்ரா  திரைப்படத்தில் விக்ரம்  ஸ்ரீநிதி ஷெட்டி மிருனாளினி ரவி மீனாட்சி ஆகியோர் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கோப்ரா இன்று மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது இந்த நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் வேற லெவல் என பதிவிட்டுள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல் கண்டிப்பாக இந்த திரைப்படம் சியான் விக்ரமுக்கு இன்னொரு தேசிய விருது வாங்கித் தரும் எனவும் பாராட்டி புகழ்ந்துள்ளார்கள் விக்ரமின் சினிமா வாழ்க்கையில் இன்னொரு திருப்புமுனையாக இந்த திரைப்படம் அமையும் எனவும் கூறியுள்ளார்கள்.

cobra
cobra

கமல் நடித்த விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவை தலை நிமிரச் செய்துள்ளது கோப்ரா திரைப்படம் எனவும் நிச்சயம் இந்த திரைப்படம் பெரிய ஹிட்டாக அமையும் எனவும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள். சியான் விக்ரம் முதல் என்ட்ரியே படுமாஸாக இருக்கிறது எனவும் ஏ ஆர் ரகுமான் போட்டுள்ள பிஜிஎம்  மிரட்டுகிறது எனவும் பதிவிட்டுள்ளார்கள்.

cobra
cobra

இன்டர்வெல் ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காத வகையில் வேற லெவலில் இருக்கிறது எனவும் இரண்டாம் பாதி சென்றால் மாபெரும் படம் ஹிட்டு தான் எனவும் சியான் விக்ரமுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகப்பெரிய ஹிட் திரைப்படமாக அமையும் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

cobra
cobra

Leave a Comment