கோப்ரா படகுழுவினர் விக்ரமின் புதிய லுக்கை வெளியிட்டுயுள்ளனர்.! இதோ அந்த மாஸ் புகைப்படம்.

cobra
cobra

தமிழ் சினிமாவில் பலரும் நடிக்க தயங்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றி காண்பவர் நடிகர் விக்ரம். அது போன்ற பல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு தற்போது சிறப்பாக வலம் வருகிறார் இருப்பினும் சமீபகாலமாக சிறப்பான படங்களை தேர்வு செய்யாததால் தற்பொழுது வெற்றிக்காக ஏங்கி வருகிறார்.

இந்த நிலையில் அஜய் ஞானமுத்து அவர்களுடன் இணைந்து விக்ரம் அவர்கள் கோபுரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜய் ஞானமுத்து அவர்கள் இதற்கு முன்பு டிமான்டி காலனி ,இமைக்காநொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதனால் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார் விக்ரம் இப்படத்தில் விக்ரம் பலவிதமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பல விதமான கெட்டப்பில் விக்ரம் இருந்தார். இந்த கோபுர படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைக்கிறார் சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தில் இருந்து தும்பி துள்ளல் என்ற பாடல் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார் இவர் இதற்கு முன்பு கேஜிஎப் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இப்படத்தில் மேலும்  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் அவர் இப்படத்தில் வில்லனாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்ரம் இந்த படத்தில் ஒரு விதமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது இந்த புகைப்படத்தில் விக்ரம் ரெட்ரோ  ஸ்டைலில் காட்சியளிக்கிறார். இதோ அந்த புகைப்படம்.

vikram
vikram