அஜித்தின் சிட்டிசன் திரைப்படத்தில் மீனா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகைதான்.!

0

சரவண சுப்பையா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2001ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் சிட்டிசன் இந்த திரைப்படத்தில் அஜித் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், அப்பா அஜித்திற்கு மனைவியாக பிரபல நடிகையான மீனா நடித்திருந்தார், அதேபோல் மகன் அஜித்திற்கு ஜோடியாக பின்னணி பாடகி வசுந்தரா நடித்திருந்தார், மேலும் மணிவண்ணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார் இந்த நிலையில் அப்பா அஜித்திற்கு மனைவியாக நடித்த மீனா கதாபாத்திரத்தில் யார் முதலில் நடிக்க இருந்தவர் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது, மீனா கதாபாத்திரத்தில் அஜித்திற்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியல் நடிகை அபிதா தான் நடிக்க இருந்தார்.

அபிதா தமிழில் எட்டுப்பட்டி ராசா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து கோல்மால், சேது, சீறிவரும் காளை, பூவே பெண் பூவே, அரசாட்சி, உணர்ச்சிகள், என ஒரு சில தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்தார் தற்போது இவர் சீரியலில் நடித்து வருகிறார் இவள் சன் தொலைக்காட்சியில் திருமதி செல்வம் சீரியல் இன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர்.

abithaa
abithaa

அதைப்போல் பாலா இயக்கத்தில் வெளியாகி விக்ரம் நடித்த சேது திரைப்படம் விக்ரம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது திரைப்படம் அதே போல் இந்த திரைப்படத்தின் மூலம் தான் விக்ரமிற்கு சீயான் என்ற பட்டப் பெயர் கிடைத்தது, இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் பிரபலமடைந்தவர் தான் அபிதா, அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இவருக்கு சினிமாவில் சரியான பட வாய்ப்பு அமையாததால் சீரியல் பக்கம் திரும்பினார் சேது படத்திற்கு பிறகு சிட்டிசன் படத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அழைத்தார்கள் ஆனால் இவர் அந்த திரைப்படத்தில் நடிப்பதை நிராகரித்துவிட்டார் அதன் பின்னர் ஏன் அந்த பட வாய்ப்பை மிஸ் செய்தோம் என்று மிகவும் கஷ்டப்பட்டாராம்.