சிட்டிசன் படத்தில் அஜித் தூக்கிவைத்திருக்கும் இந்த சிறுவன் எப்படி இருக்கிறார் தெரியுமா.? இதோ புகைப்படம்

citizan
citizan

2001 ஆம் ஆண்டில் அஜித் நடிப்பில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த திரைப்படம் சிட்டிசன் இத்திரைப்படத்தை சரவண சுப்பையா இயக்கி இருப்பார் இத்திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். இப்படத்தில் தேவா இசை அமைத்திருப்பார் இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இப்பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடத்தது.

இத்திரைப்படத்தில் குழந்தையாக நடித்திருப்பவர் உதய் ராஜ் இத்திரைப்படத்தின் மூலம் தான் குழந்தை நட்சத்திரமாக உதயராஜ் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த திருமலை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமாகி சில வருடங்களிலேயே பெரியவர்கள் போல மாறி விடுகிறார்கள் எனவே அவர்களை சிறுவர்களாக பார்த்துவிட்டு பெரியவர்களாக பார்ப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுகிறோம். இவர் விஜய்,அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்ததால் பிரபலம் அடைந்துள்ளார்.

thirumala
thirumala

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் உதயராஜ் 17 வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் நடித்துள்ளதாக  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பதிவிட்ட உடன்  ரசியக்ரகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இவர் விஜய் சேதுபதி உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

thirumala
thirumala