பட வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி 100 பெண்களிடம் ஜல்சா.! வீடியோவை எடுத்து மிரட்டிய இயக்குனரை வளைத்துப் பிடித்த போலீசார்.!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் மிகவும் கடினமாக இருந்தது.  அதுமட்டுமில்லாமல் வாய்ப்புக்காக பலரையும் தேடி அலைவார்கள். ஆனால் தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் திறமை இருந்தால் அதை வெளிக் கொண்டு வந்தாலே எளிதாக வாய்ப்பு கிடைத்துவிடுகிறது.

இந்த நிலைகள் பட வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய போலி இயக்குனரை போலீசார் கைது செய்துள்ளனர். இயக்குனர் என தன்னைக் கூறிக் கொண்டு பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து அதை மறைமுகமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்த போலி இயக்குனர் இமானுவேல் என்பவரை ராமேஸ்வரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இவருக்கு வயது நாற்பத்தி ஆறு கடந்த சில நாட்களுக்கு முன்பு சினிமா எடுப்பதாக கூறி ராமேஸ்வரம் வந்து ஐந்துக்கும் மேற்பட்ட நட்சத்திர ஹோட்டலில் பல அறைகளை முன்பதிவு செய்துள்ளார். அதன் பிறகு சினிமா படம் எடுக்கப் போவதாக கூறி தனுஷ்கோடி அவருடன் சென்றுள்ளார்  கோவில் ஒன்றில் பூசாரியாக கார்த்திக் ராஜா என்பவரை சந்தித்து தான் ஒரு திரைப்பட இயக்குனர் என்றும் சக்தி என பெயரை கூறிக்கொண்டு ஒரு புதிய படத்தை இயக்க இருப்பதாகவும் அதில் பூசாரி வேடத்திற்கு ஆள் தேவை எனவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பூசாரி வேடத்திற்காக 10 லட்சம் ரூபாய் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார் அதனை நம்பி கார்த்திக் ராஜா ஒரு லட்ச ரூபாயை இமானுவேல் அவரிடம்  கொடுத்துள்ளார்.மேலும் அந்த பூசாரி தன்னுடன் தனது மனைவியையும் நடிக்க வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் உடனே இம்மானுவேல் இயக்குனர் ஓகே என கூறிவிட்டு படம் வெளியானதும் இந்த பணத்தையும் உங்களுடைய சம்பளப் பணத்தையும் சேர்த்து தருகிறேன் என கூறிவிட்டார்.

அதன்பிறகு இமானுவேல் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலுக்கு கார்த்திக் ராஜா  சென்றுள்ளார் அப்பொழுது வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கார்த்திக் ராஜாவை பார்த்து இமானுவேல் அவரை நம்ப வேண்டாம் என்னைபோல் பல பெண்களிடம் பட வாய்ப்பு தருவதாக கூறி உல்லாசமாக இருந்து விட்டு அதனை வீடியோவாக எடுத்து கொண்டு இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி பணத்தை பறித்து வருகிறார் என்னிடமிருந்து நகைகளையும் பணத்தையும் பறித்து விட்டார் தயவுசெய்து இங்கிருந்து சென்று விடுங்கள் என அந்தப் பெண் கூறியுள்ளார்.

அதன் பிறகு இமானுவேல் அவர்களை சந்தித்து தனது பணத்தை வாங்கி விடலாம் என எண்ணி  நட்சத்திர விடுதிக்கு சென்று உள்ளார் ஆனால் மேஜை மீது இருந்த கைத்துப்பாக்கியை பார்த்து விட்டு அலறி அடித்துக்கொண்டு ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

உடனடியாக விரைந்து சென்றார் போலீசார் ஆனால் இதனை தெரிந்துகொண்ட இமானுவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் ஆனால் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இமானுவேல் அவர்களை கையும் களவுமாக போலீசார் பிடித்தார்கள். இமானுவேல் அவர்களிடம் இருந்த செல்போனை அபகரித்து அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் இமானுவேல் அவர்களுடன் இருந்த பெண்கள் புகைப்படங்கள் என அனைத்தையும் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள்.

அதன்பிறகு போலீசார் பாணியில் விசாரணையை தொடங்கினார்கள். அப்போதுதான் தெரியவந்தது இமானுவேல் இணையதளம் மூலமாக பெண்களை அழைத்து அவர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை தனது ஆசையை அனுபவித்த பிறகு அதனை வீடியோவாக எடுத்து பணத்தையும் பிடுங்கி உள்ளார் இந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைக்க இருக்கிறார்கள்.

fake director
fake director

Leave a Comment