KGF பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியின் வாழ்க்கையை மாற்றி அமைந்த சினிமா பிரபலம் – அவரே சொன்ன தகவல்.!

சினிமா என்பது ஒரு இலக்கு யாருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் அதிர்ஷ்டம் அடிக்கும் அந்த வகையில் மாடல் அழகியாக இருந்து கொண்டு படித்து வந்தவர் ஸ்ரீநிதி ஷெட்டி.  இவர் சினிமா உலகில் அடி எடுத்து வைப்பதற்கு முன்பாக மாடல் அழகியாக பல்வேறு விருதுகளை தன்வசப்படுத்தி உள்ளார்.

திவா சுப்ரா நேஷனல் அழகி பட்டத்தையும் அதன்பின் மிஸ் சுப்ரா நேஷனல் பட்டதையும் 2016 ஆம் ஆண்டு பெற்றார். உருது மொழியை தாய்மொழியாக கொண்ட ஸ்ரீநிதி பெங்களூருவில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார் அதற்குப் பிறகு கேஜிஎப் முதல் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அதை தொடர்ந்து கே ஜி எஃப் 2 படத்திலும் நடித்து அசத்தினார் ஆள் பார்ப்பதற்கு அழகாகவும் தனது திறமையையும் காட்டியதால் தற்போது இவருக்கு என மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உருவாகி உள்ளனர். அதே சமயம் தமிழ் சினிமா உலகிலும் கால் தடம் பதித்துள்ளார்.

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்திலும் நடித்து முடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி வருகிறது இன்ஜினியரிங் மற்றும் மாடலிங் துறையில் வாழ்ந்து வந்த ஸ்ரீநிதி ஷெட்டி அவர்களின் வாழ்க்கை தற்போது தரம் புரண்டு சினிமாவுலகில் அசுர வளர்ச்சியை எட்டி உள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளது.

உங்கள் சொந்த முடிவுகள் உங்கள் வாழ்க்கையை மாற்றி கனவுகளை அடைய உதவும் போது சில சமயங்களில் வேறு ஒருவரின் முடிவு மிக அரிதாக அதை செய்யலாம் பிரசாந்த் நீல் என்னை தேர்ந்தெடுத்ததால் என் வாழ்க்கை சிறப்பாக மாற்றிவிட்டது. அனைத்திற்கும் நன்றி பிரசாந்த் நீல் என அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment