விவேக்கின் கடைசி ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது என புலம்பும் சினிமா பிரபலங்கள்

திரை உலகில் வெறும் காமெடி மட்டும் சொல்லி மக்களை சிரிக்க வைக்காமல் சிந்திக்கவும் வைத்து தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவியவர் நடிகர் விவேக்.

மேலும் இதன் மூலம் தேசிய விருதையும் பெற்ற காமெடி என்ற அந்தஸ்தை தன்பக்கம் வைத்துள்ளார்.

இப்படி சினிமாவில் கொடிகட்டிப் பறந்த வந்தாலும் இவர் ஒரு நடிகர் என்று மட்டும் நடிக்காமல் இதுவரை இருந்துள்ளார் ஆனால் அவரது திரைவாழ்வில் அவர் ஒருவருடன் மட்டும் நடித்து விட்டால் தனது ஆசை நிறைவேறும் என விவேக் கூறியிருந்தார் அது வேறு யாருமல்ல நடிகர் கமல்தான்.

அவருடன் இதுவரையிலும் ஒரு படத்தில் கூட நடிக்காமல் இருந்து வந்தார் நடிகர் விவேக் இவருடன் சமீபத்தில் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் இந்தியன் 2 படம் எடுக்கப்பட்ட இருந்தது இதில் ஒரு கதாபாத்திரத்தில் விவேக் நடிக்க இருந்தார் படம் ட்ராப் ஆனதால் கைகூடாமல் போனது.

அதன் பிறகு எப்படியாவது ஒன்று சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நேற்று மாரடைப்பால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு அவருக்கு பல சோதனைகள் செய்தாலும் அவர் ஒரு கட்டத்தில் உடல் ஒத்துழைக்காததால் இன்று அதிகாலை 4:45 அவர் இறந்தார்.

தற்பொழுது அவர்களுடன் சேர்ந்து நடிக்காதது அவருக்கு மிகப்பெரிய நிறைவேறாத ஆசையாகவே தற்போது மாறியுள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு மிகப்பெரிய ஜாம்பவான் இறந்துள்ளது கோலிவுட் வட்டாரத்தை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Leave a Comment