நீண்டகாலமாக மூடப்பட்ட திரையரங்கம் அதிரடியாக திறக்கப்படுகிறது.! முதல் படமே தல படம் தான்

0

சென்னை மவுண்ட் ரோட்டில் சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ளது காசினோ திரையரங்கம், இந்த திரையரங்கம் சில பிரச்சினை காரணமாகவும் சமாளிக்க முடியாமலும் நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் திறக்கப்போவதாக தெரிவித்துள்ளார் திரையரங்கத்தின் உரிமையாளர்.

casino
casino

தல அஜித் pink படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது, படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார், நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் பாடல் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது, அது மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

casino
casino

இந்த நிலையில்  நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த கசினோ  திரையரங்கம் மீண்டும் திறப்பதால் தல படத்தை தான் முதலில் இறக்கப் போவதாக அறிவித்துள்ளார் திரையரங்க உரிமையாளர், தலையை வைத்து தொடங்கினால் எல்லாமே வெற்றிதான் என்பது திரையரங்க உரிமையாளரின் நம்பிக்கை மேலும் அந்த திரையரங்கத்தில் ஆன்லைன் புக்கிங் இருப்பதால் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.