ஒன்றா இரண்டா ஏழு கெட்டப்களில் சியான் விக்ரம்.! மிரட்டும் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவரின் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கும், ஏனென்றால் இவர் படத்தில் நடிக்கிறார் என்றால் தன்னைத் தானே முழுமையாக அர்ப்பணித்து விடுவார்.

அந்த அளவு சினிமாவிற்காக பாடுபடுபவர், இந்தநிலையில் இமைக்க நொடிகள் புகழ் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் திரைப்படம் கோப்ரா. இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது.

அதனால் மூன்று மொழி மக்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காக படத்தின் தலைப்பை கோப்ரா என வைத்துள்ளார்கள் படக்குழு. சினிமாவிற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு முழுமையாக உழைத்த விக்ரமிற்கு சமீபகாலமாக எந்த ஒரு படமும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை.

அதேபோல் ஒவ்வொரு படமும் அவரை தனித்தனியாக நிலை நிறுத்துகின்றது என்றாலும் வசூலில் கொஞ்சம் மோசமான நிலைதான், அதே போல் விக்ரம் தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுக்க காட்டும் ஆர்வத்தை படங்களின் திரைக்கதைகளிலும் ஸ்கிரிப்ட்களிலும் காட்டினால் நிச்சயம் விக்ரம் வெற்றிபெற முடியும் எனக் கூறுகிறார்கள் ரசிகர்கள்.

chiyaan
chiyaan

அதனால் இந்த கோப்ரா  திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது, விக்ரம் இந்த திரைப்படத்தை மலைபோல் நம்பி இருக்கிறார், கோப்ரா  திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏஆர் ரகுமான் அவர்கள் வெளியிட்டுள்ளார், இந்த இத்திரைப்படத்தில் விக்ரம் 7 கெட்டப்களில் இருக்கிறார் இதோ அந்த போஸ்டர்.

chiyaan
chiyaan

Leave a Comment