சியான் 60 படத்தின் வேற லெவல் அதிகாரபூர்வ அப்டேட்.!

சியான் விக்ரம் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் துரு விக்ரம் இவர் ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தில் அட்டகாசமாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார்.

மேலும் துரு விக்ரம் மற்றும் சியான் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டதால் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் சியான் 60வது என்ற திரைப்படத்தில் இருவரும் நடித்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தை ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் தயாரிக்கிறார் இந்தத் திரைப்படத்திற்காக ஒளிப்பதிவாளர் ஷெரேயாஸ் கிருஷ்ணா பணிபுரிந்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இந்த படப்பிடிப்பு பத்தாம் தேதி தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தத் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் உடன் பாபி சிம்ஹா,வாணிபோஜன், முத்துக்குமார்,சனந்த் ரெட்டி போன்ற சினிமா பிரபலங்கள் பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் புதிதாக ஒரு பிரபலம் இணைந்துள்ளார் அந்த பிரபலம் யார் என்று கேட்டால் வேறு யாருமில்லை இந்தத் திரைப்படத்திற்காக எடிட்டராக பணியாற்ற வரும் விவேக் ஹர்ஷன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் பலரும் கூடிய சீக்கிரம் சியான் 60 திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் செம ஹிட்டாகும் என கூறி வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த அறிவிப்பு.

Leave a Comment