சீயான் 60 படத்தில் bobby யை சேர்த்து கொண்ட இயக்குனர்.! இவர் இல்லனா தலை கால் புரியமா போய்டும்.

சினிமாவில் இளம் இயக்குனர்கள் சிறந்த படைப்புகளை கொடுத்து வருவதால் வெகு விரைவிலேயே முன்னணி நடிகரின் படங்களை கைப்பற்றி வருகின்றனர்.

அப்படி சிறந்த படங்களை கொடுத்து பெயரும், புகழும் சம்பாதித்த கார்த்திக் சுப்புராஜ். ரஜினியை வைத்து பேட்ட என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார் அதன் பிறகு தற்போது ஜகமே தந்திரம் படத்தையும் வெற்றிகரமாக முடித்துள்ளார் அடுத்ததாக நடிகர் விக்ரமை வைத்து சியான் 60  திரைப்படத்தை எடுக்க உள்ளார்.

இந்த கூட்டணி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது கூடுதலாக துணை கேரக்டரில் தேசிய விருது வாங்கிய பாபி சிம்ஹாவும் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்பாராஜ் படங்களான பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திலேயும் பாபி சிம்ஹாவை நேரம் அற்றது இணைத்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஒரு முக்கிய ரோல் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment