சியான் 60 : அப்பாவைப் போல் கரடுமுரடாக உடலை ஏற்றிய துருவ் விக்ரம்.! மிரட்டலான புகைப்படம் இதோ.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம், இவர் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர். அதே போல் விக்ரம் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் ஏனென்றால் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக மிகவும் கடுமையாக உழைத்து இருப்பார்.

இந்நிலையில் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது, இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் இதே தயாரிப்பு நிறுவனத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் 60 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் மகனுக்கு வில்லனாக விக்ரம் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் சமீபத்தில் கிடைத்தது, அதற்காக விக்ரமின் மகன் இந்த லாக் டவுனை பயன்படுத்திக்கொண்டு படத்திற்கு ரெடியாகி வருகிறார்.

அதற்காக உடற்பயிற்சி கடுமையாக செய்து தனது உடலை கரடுமுரடாக மாற்றி வருகிறார், இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது,

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

https://twitter.com/Mathanotnm/status/1278943509957890048?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1278943509957890048%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fkalakkalcinema.com%2Fdhruv-vikram-in-chiyaan-60-look%2F111056%2F

Leave a Comment