சியான் 60 படத்திற்காக தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்ட துருவ் விக்ரம்.! ட்ரிம் செய்த தாடி கட்ட மீசையை வைத்து மிரட்டும் புகைப்படம்.! அப்பாவை தூக்கி சாப்பிடும் மகன்.

நடிகர்கள் திரை உலகில் பல ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் தொடர் தோல்வி படங்களை கொடுப்பதால் ஒரு நடிகர் எந்த நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அதிலிருந்து மீண்டு வர பல முன்னணி நடிகர்கள் தொடங்கி இளம் நடிகர்கள் வரை போராடி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையும் மூலம் பல ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் சமீப காலமாக விக்ரம் படங்கள் வெற்றி பெறாததால் தற்போது கோப்ரா பெரிதும் நம்பி இருக்கிறார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது அதன் பிறகு தனது 60வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். கோப்ரா படம் வெற்றியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் ரஜினி, தனுஷை வைத்து படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் சியான்  விக்ரமை வைத்து அவரது 60வது திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் சேர்ந்து அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்ற செய்தி படத்தின் டைட்டிலை அறிவிக்கப்பட்ட போதே சொல்லபட்டது. மேலும் தற்போது பல திறமை உள்ள நடிகர்களை படத்தில் களம் இறங்கி வருகிறார் இயக்குனர்.

இந்த நிலையில் துருவ் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க உள்ளார் என சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளன அதற்காக அவர் முன்புறமாக தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டும்  வருகிறார். அந்த வகையில் தன்னை முற்றிலும் மாற்றி வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

சியான் 60 திரைப்படத்தில் துருவ் விக்ரம் நிச்சயம் ஒரு வில்லன் ரோலில் நடிப்பார் என தெரியவருகிறது. இது அவருக்கு நிச்சயம் ஒரு வெற்றியை கொடுக்கும் எனவும் பலரும் எழுதி வருகின்றனர் முந்தைய படங்களில் சாக்லேட் பாயாக நடித்த விக்ரம் இந்த திரைப்படத்தில் முரட்டுத்தனமாக நடிக்க உள்ளதால் இவருக்கான வரவேற்பு தற்போது தமிழ் சினிமாவில் எதிரி உள்ளது.

dhruv vikram
dhruv vikram
dhruv vikram
dhruv vikram
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment