பிரமாண்ட சாதனை படைத்த சித்ரா.! ஆனால் சாதனையை பார்க்க இப்போ அவர் இல்லையே ரசிகர்கள் கண்ணீர்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சித்ரா. இவர் தனது கெரியரை தொகுப்பாளினியாக தான் தொடர்ந்தார். இவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இவருடைய  தற்கொலைக்கு காரணம் அவருடைய கணவர் செய்த கொடுமையினால் தான் மனமுடைந்து இறந்தார் ன்று பொலிசார் விசாரணையில் தெரியவந்தது.

இவ்வாறு பல பிரச்சனைகளைத் தாண்டி தனது விடா முயற்சியினால் முன்னுக்கு வந்த சித்ரா வெள்ளித்திரையிலும் கால்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீசாவதற்கு முன்னே இவர் மறைந்தாலும் அவருடைய ரசிகர்கள் கால்ஸ் படத்திற்காக காத்திருக்கிறார்கள்.இப்படத்தில் நடிகை சித்ராவின் வாழ்க்கையில் நடந்த உண்மையான செய்திகளும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ஜெ சபரிஷ் என்பவர் இயக்கியுள்ளார். ஜெய காவேரி, ஜெய் சபரிஷ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார். இந்நிலையில் சில காலங்களில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

calls

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இணையதளத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் தற்போது கால்ஸ் படத்தின் ட்ரைலர்  1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது.

இதனை அறிந்த சித்ராவின் ரசிகர்கள் இதை பார்க்க கூட நீங்கள் இல்லை என்று வருத்தப்பட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

calls

Leave a Comment

Exit mobile version