மறைந்த சித்ரா நடித்த முதல் எபிசோட் மற்றும் கடைசி எபிசோட் தோற்றம் இதுதான்.! அதற்குள் இவ்வளவு மாற்றமா தீயாய் பரவும் புகைப்படம்.!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்த சீரியல் இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மறைந்த சித்ரா இவரின் இழப்பை ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அதுமட்டுமில்லாமல் இவரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பலரும் தங்களது கருத்தை பதிவிட்டு வந்தார்கள் ஏனென்றால் சித்ரா மிகவும் தைரியசாலி பெண் அதனால் அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை கிடையாது என பலரும் கூறினார்கள்.

இந்த நிலையில் சித்ரா மறைந்ததால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இனி சித்ராவை காண முடியாது அதுமட்டுமில்லாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியல் சித்ராவிற்கு பதிலாக காவியா என்ற நடிகை நடிக்க இருக்கிறார்.

அதன் ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் மற்றும் நடிகை சித்ரா ரசிகர்கள் மத்தியில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் முதல் எபிசோடில் சித்ரா எப்படி இருந்துள்ளார் என்பதையும் கடைசி எபிசோட்டில் எப்படி இருக்கிறார் என்பதையும் இணைத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள் ரசிகர்கள்.

இதோ அந்த புகைப்படம்.

chitra

Leave a Comment

Exit mobile version