சித்ரா நடித்த திரைப்படத்தை தட்டி தூக்கிய முன்னணி தொலைக்காட்சி நிறுவனம்.!

0

சின்னத்திரையில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் நடிகை விஜே சித்ரா. இவர் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணிபுரிந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அதன்பிறகு நடிகை ராதிகா, நிரோஷா மற்றும் நளினி ஆகியோருடன் இணைந்து ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்ற தொடரில்  நடிக்க வாய்ப்பு பெற்றார். இந்த தொடரின் வெற்றியின் பிறகு, பாண்டியன் ஸ்டோர் என்ற தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த முல்லை கதாபாத்திரம் மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமல்லாமல் இவரை ஒரு சிலர் முல்லை என்றும் அழைத்து வந்தனர். அதன்பிறகும் முல்லையின் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சித்ராவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.

இதையடுத்து விசித்ரா ஹேம்நாத் என்ற தொழிலதிபரை காதலித்து வந்தார், இவர்களுக்கு நிச்சயதார்த்தம் கூட ஆகியிருந்தது, பின்னர் இவர்கள் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக  ஹோட்டலில் உள்ள அறையில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் விஜே சித்ரா.

vj chitra
vj chitra

இவர் இறப்பதற்கு முன்பு கால்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் தற்போது இந்த படத்தை தொலைக்காட்சி டிவியான கலர்ஸ் டிவி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருப்பதா இல்லை சோகத்தில் இருப்பதா என புலம்பி வருகிறார்கள்.