chithra case rakshan latest speech: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்னும் கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் தான் நடிகை சித்ரா இவர் இதற்கு முன்பாக தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவ்வாறு சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டது ரசிகர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருடைய கணவரை போலீஸ் அதிகாரிகள் மிக தீவிரமாக விசாரித்து கொண்டு வருகிறார்கள். இவ்வாறு விசாரணையின்போது பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. முதலில் தற்கொலை என்று கருதப்பட்ட இந்த சம்பவமானது தற்போது கொலை என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரக்ஷன் என்பவர் இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது ஏனெனில் ரக்ஷனும் சித்தராகவும் காதலித்ததாகவும் இருவரும் தனியாக இருந்த வீடியோவை வைத்து மிரட்டி வந்ததாகவும் பிரபல செய்தி சேனலில் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் ரக்ஷன் சித்ராவுக்கும் எனக்கும் இதுதான் சம்பந்தம் என ரக்ஷன் சமீபத்தில் பேட்டியில் கூறியுள்ளார் அதுமட்டுமல்லாமல் சித்தரா இறந்ததில் அதிகம் வருத்தப்படுவது நான்தான் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதாவது சித்ராவும் நானும் நெருங்கிய நண்பர்கள் பொதுவாக திரையுலகைப் பொறுத்தவரை ஒரு நேரத்தில் சம்பாதித்தால் தான் அதன் பிறகு சம்பாதிக்க முடியாது இதனை கருத்தில் கொண்டு வெளியூர் விழாக்களில் நாங்கள் கலந்து கொள்ளும் பொழுது சித்தரா தான் எனக்கு உறுதுணையாக இருப்பார்,
நாங்கள் நண்பர்களாக இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதைப்பார்த்து மீடியாக்களும் பிரபல செய்தி சேனல்களும் எங்களுக்குள் இருப்பது காதல் என பரப்பி விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் எனக்கு திரை உலகில் வருவதற்கு முன்பாகவே திருமணம் ஆகிவிட்டது இதனை மறைத்து தான் நான் திரையில் நுழைந்தேன் தற்போது இதுவே அவருக்கு பிரச்சனையாக இருப்பதால் இந்த உண்மையை கூறி உள்ளார்.
மேலும் சித்ரா மிக தைரியமானவர் அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழையானவர் கிடையாது. சித்ராவை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர் யார் என்பதை கண்டறிந்து அவருக்கு கண்டிப்பாக தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என ரக்ஷன் தெரிவித்துள்ளார்.
