சித்திரம் பேசுதடி திரைப் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இந்த முன்னணி நடிகர் தான்.

chithiram-pesuthadi-tamil360newz
chithiram-pesuthadi-tamil360newz

நடிகர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை இயக்கக்கூடிய இயக்குனர் ஆவார்,  இவர் 2006 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் நரேன், பாவனா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சித்திரம் பேசுதடி, இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது,

சித்திரம் பேசுதடி திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தை உடையது இந்த கதையை முதன் முதலில் இயக்குனர் மிஷ்கின் விஜய்க்காக தான் எழுதினாராம், இந்த திரைப்படத்தின் ப்ரிவியூவ் ஷோவை விஜய் பார்த்துவிட்டு இது போல் கதை ஒன்றை ரெடி பண்ணுங்க நாம கண்டிப்பா பண்ணலாம் என கூறினாராம். அதற்கு மிஸ்கின் இந்த கதையே உங்களை நினைத்து தான் தயார் செய்தேன் எனக் கூறினார்.

மேலும் மிஷ்கின் விஜயிடம் இந்த கதையை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக உங்களிடம் கூற முடியவில்லை என விஜயிடம் மிஸ்கின் கூறியுள்ளார், இதற்கு விஜய் மிகவும் வருத்தப்பட்ட தாக ஒரு பேட்டியில் இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார். விஜய் சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் நடித்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும் என ரசிகர்கள் கருத்து கூறகிறார்கள்.

தற்பொழுது தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், சமீபகாலமாக விஜய் திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனையை செய்து வருகிறது சென்ற வருடம் நடித்த பிகில் திரைப்படம் மெகா ஹிட்டானது அதனைத் தொடர்ந்து தற்போது மாஸ்டர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வெளியாகி எப்படிப்பட்ட சாதனை படைக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.