பேத்தியுடன் சேர்ந்து செம்ம கியூட்டான நடனம் போட்ட சிரஞ்சீவி.! வைரலாகும் வீடியோ!!

0

சிரஞ்சீவி தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர். மேலும் இவர் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2006 ல் இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை பெற்றார். மேலும் இவர் 7 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே தெலுங்கு திரைப்பட நடிகர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் நடித்த ஜகத்குரு ஆதி சங்கரா, புரூஸ் லீ தி பைட்டர், ருத்ரமாதேவி, கைதி நம்பர் 150, சைரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்களின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டினார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்த சிரஞ்சீவி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தற்போது இவர் பேத்தியுடன் இருக்கும் வீடியோ ஒன்றினை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். சிரஞ்சீவியும் அவரது பேத்தியும் விஜய்யின் கத்தி பட ரீமேக்கான கைதி நம்பர் 150 படம் பாடல் ஒன்றிற்கு நடனமாடுகிறார்.

யூ அண்ட் மீ என்ற பாடலுக்கு பேத்தி நிவிஷா நடனமாடிய வீடியோவை இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.