ஆரம்பத்தில் இப்படிதான் போகும்… வைரமுத்துவை தனியாக சந்தித்த விஜேவுக்கு சின்மயி எச்சரிக்கை…

பாடல் ஆசிரியர் வைரமுத்துவை தனியாக பார்க்க போக வேண்டாம் பிரபல விஜேவுக்கு சின்மயி எச்சரிக்கை கொடுத்துள்ளார். அதாவது சீரியல் நடிகை விஜே அர்ச்சனாவுக்கு சின்மயி வார்னிங் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர்தான் சின்மயி.

இவர் பாடகியாக மட்டுமல்லாமல் சமந்தா, திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு  பின்னணி குரலும் கொடுத்துள்ளார். மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, என பல மொழிகளில் பாடல்களை பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை  பெற்றுள்ளார்.

அதன் பிறகு கடந்த  2014 ஆம் ஆண்டு ராகுல் ரவீந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் சின்மயி தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருக்கும் வைரமுத்து தன்னை பாலியல் தொல்லை செய்துள்ளார் என்று சோசியல் மீடியாவில் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

அதாவது வைரமுத்துவும் சின்மயியும் வெளிநாட்டிற்கு ஒரு இசை நிகழ்ச்சிக்காக சென்றபோது வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என கூறி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் வைரமுத்துவால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் விஜேவும் சீரியல் நடிகையுமான அர்ச்சனா கவிஞர் வைரமுத்துவை சந்தித்து அவரிடம் சிறிது நேரம் உரையாடல் நடத்தியுள்ளார் அந்த புகைப்படத்தை சமிபத்தில் விஜே அர்ச்சனா சமூக வலைதளத்திலும் அந்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த பாடகி சின்மயி விஜே அர்ச்சனாவுக்கு வார்னிங் கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் விஜே அர்ச்சனாவின் தலையில் ஆசிர்வாதம் செய்யும் போட்டோவை ஷேர் செய்துள்ள சின்மயி இது இப்படித்தான் ஆரம்பிக்கும் போக போக வேற மாதிரி போய்விடும் ஆகையால் கொஞ்சம் பத்திரமாக இருங்கள் என்று கூறி தற்போது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Leave a Comment