ஒரு மணி நேரத்தில் துணிவு சில்லா சில்லா செய்த தரமான சம்பவம்.! சுக்குநூறாக நொறுங்கிய ரஞ்சிதமே சாதனை..

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் தற்பொழுது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என கூறப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி மஞ்சு வாரியார் மேலும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்திலிருந்து அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோ வெளிவந்த நிலையில் சமீபத்தில் கூட படத்தில் நடித்த நடிகர்களின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகும் என பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. அப்படி இருக்கும் வகையில் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

பட குழு இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள் அதனால் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிஷத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் இந்த நிலையில் ஆறு முப்பது மணிக்கு சில்லா சில்லா பாடல்  படக்குழு அறிவித்தது போல் வெளியாகியது. இந்த சில்லா சில்லா பாடலை அனிருத் தான் பாடியுள்ளார் அது மட்டும் இல்லாமல் ஜிப்ரான் இசையில் மிரட்டியுள்ளார்.

ஜிப்ரான் இசையில் அனிருத் பாடிய இந்த பாடல் ஒரு மணி நேரத்திலேயே விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் பாடல் ஆன ரஞ்சிதமே பாடலின் சாதனையை சுக்கு நூறாக நொறுக்கியது. ஒரு மணி நேரத்தில் ரஞ்சிதமே பாடல் வெளியாகி  500k லைக் மட்டுமே பெற்று இருந்தது ஆனால் துணிவு திரைப்படத்தின் சில்லா சில்லா பாடல்  வெறும் 47 நிமிடத்தில்500k லைக் பெற்று  வாரிசு திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

இந்த நிலையில் ஒரு மணி நேரத்தில் துணிவு திரைப்படத்தின் பாடல் ஆன சில்லா சில்லா ஒரு மணி நேரத்தில் 555k லைக் பெற்று மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த ஒரு மணி நேரத்தில் 192 k பார்வையாளர்களையும் கடந்துள்ளது. ஆனால் ஒரு மணி நேரத்தில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளதால் இன்னும் 24 மணி நேரத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment