குட்டி நயன்தாரான்னா சும்மாவா.! வைரலாகும் அணிகாவின் புகைப்படம்.!

0

child artist anikha modern look photos: தமிழ் சினிமா திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா இன்றளவும் இளைஞர்களின் கனவுகன்னியாக இடம் பிடித்துள்ளார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் மலையாள நடிகையின் டச்சப் கேளாக பணிபுரிந்துள்ளார். பின் 2003ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி பதித்தார்.

இவர் தமிழ்த் திரையுலகில் ஐயா என்ற திரைப்படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடித்துள்ளார். இதுவே நயன்தாரா தமிழில் நடித்த முதல் திரைப்படமாகும். அதனைத் தொடர்ந்து சந்திரமுகி போன்ற சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்தார். இரண்டே படங்களில் இளைஞர்கள் மனதை கொள்ளை அடித்தார்.

அதன் பின் 15 வருடங்களாக தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு நடித்து வருகிறார். அதணை எடுத்து நயன்தாரா போல ஆக வேண்டும் என்ற பல நடிகைகள் சமூக வலைத்தளங்களில் தனது அழகை புகைப்படம் மூலம் சமூக வலைதளங்களில் ஆர்வத்தை காட்டுகின்றார்கள்.

தற்பொழுது நயன்தாரா நடித்து வரும் படங்களில் அண்ணாத்த, நெற்றிக்கண் மற்றும் ஆர் ஜே பாலாஜி இயக்கிவரும் மூக்குத்தி அம்மன் இது போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளிவந்த விசுவாசம் திரைப்படத்தில் நடித்த நயன்தாராவுக்கு மகளாக நடித்த அனிகா எனும் 15 வயது பெண் தற்போது சமூக வலைதளங்களில் நயன்தாரா போல புகைப்படங்களை வெளியிடுகிறார்கள். இதனையடுத்து நயன்தாராவின் ரசிகர்கள் அணிகா நயன்தாரா போல் இருக்கின்றார் என்று பாராட்டி வருகின்றனர்.

anikha surendaran
anikha surendaran