பிக்பாஸில் கலந்து கொண்டதற்கு காரணம் இதுதான் உண்மையை போட்டு உடைத்த சேரன்.!

0

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3 இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனாலும் சர்ச்சைகளும் அரங்கேறின, பிக்பாஸ் ஆரம்பத்திலிருந்து நாளுக்கு நாள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

இந்த பிக்பாஸில் சேரன் கலந்து கொண்டது பல விமர்சனங்களை எழுப்பியது, தமிழக விருது, தேசிய விருது என மக்களுக்கு பல தரமான திரைப்படங்களை கொடுத்த சேரன் இந்த நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என பலரின் கேள்வியாக இருந்தது.

பிக்பாஸில் மீரா மிதுன் சேரன் தன்மீது கை வைத்தார் என குற்றச்சாட்டை முன்வைத்தார் அதனால் பலரும் இதற்கு கண்டனங்கள் தெரிவித்தார்கள், அதுமட்டுமில்லாமல் சேரன் அப்படிப்பட்டவர் இல்லை என பிக்பாஸில் உள்ள அனைவரும் கூறினார்கள்.

இந்த நிலையில் பிக்பாஸில் சேரன் கலந்து கொண்டது என்பது குறித்து சேரன் தற்போது தெரிவித்துள்ளார், அவர் கூறியதாவது, தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் பிரேமம் , 96 படங்கள் ஆட்டோகிராப் படம் மாதிரி இல்லை எனவும் தெரிவித்தார்.