பிக்பாஸ் சீசன் 4 பிரபலத்தை வைத்து படம் இயக்க போகும் சேரன்.? யார் அந்த நபர் தெரியுமா.?

0
seran-
seran-

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களில் நடிகராகவும் இயக்குனராகவும் பணியாற்றியவர். பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற பல நல்ல திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் மேலும் இவர் இயக்கிய பல திரைப்படங்களுக்கு தேசிய விருதும் பெற்றார்.

பின்பு ஒரு கட்டத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளம் பிரபலங்களுடன் போட்டி போட்டு சிறப்பாக விளையாடினார். அந்த நிகழ்ச்சியில் சேரன் மற்றும் லாஸ்லியாவின் அப்பா மகள் சென்டிமென்ட் பெரிதளவு பேசப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சில காலங்கள் சினிமாவில் இடைவெளி பெற்று பிறகு தற்போது திரைப்படங்களை இயக்க ரெடியாக உள்ளாராம். மேலும் அவர் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து ஒரு படம் எடுக்க இருந்த சமயத்தில் அவர்கள் வேறு படத்தில் பிஸியாக இருந்த காரணத்தினால் அந்த படம் கைவிடப்பட்டது.

பின்பு சேரன் படத்திற்காக பல நடிகர் நடிகைகளை தேடி வந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்களை கொண்ட டைட்டில் வின்னர் என்ற பட்டத்தையும் பெற்ற ஆரி அர்ஜுனன் மற்றும் பேச்சுலர் படத்தில் நடித்த நடிகை திவ்யபாரதி இருவரையும் வைத்து இயக்குனர் சேரன் படம் எடுக்க உள்ளார்.

மேலும் ஆரி பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் தற்போது சேரன் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் கூடிய விரைவில் படப்பிடிப்பு நடத்தப்படும் என தெரியவருகிறது. இந்த படம் திரையரங்குக்கு பதிலாக ஓடிடி தளத்தில் வெளியாக தயாராகிறது எனவும் கூறப்படுகின்றன.