தோற்கும் போது கிடைக்கும் வலி.. தனது பாணியில் சூரரைப்போற்று படத்தைப்பற்றி உருக்கமாக பதிவிட்ட சேரன்.!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா இவர் நீண்டகாலமாக ஒரு ஹிட் திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என போராடி வருகிறார் அந்த வகையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு சிறப்பு திரைப்படமாக அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியிடப்பட்டுள்ளது, அமேசான் ப்ரைம் இல் வெளியிட்ட இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வைரலாகி வருகிறது.

மேலும் இந்த திரைப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் டெக்கான் ஏர்லைன்ஸ் எம்ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டது.

சினிமாவில் சில ஆண்டுகளாக ஹிட் கொடுக்க வேண்டும் என்று தடுமாறி வரும் வகையில் இந்த திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் படத்தை பார்த்த பல திரைப் பிரபலங்கள் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் வடிவேலு சமீபத்தில் தனது கருத்தை தெரிவித்தார் அதேபோல் தற்போது இயக்குனர் மற்றும் நடிகரான சேரன் தனது பாணியில் சமூக வலைதளப் பக்கத்தில் சூரரைபோற்று படம் குறித்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் சேரன் கூறியதாவது முயற்சிகள் தோற்கும்போதும் தோற்கடிக்கப்படும்போதும் கிடைக்கும் வலி என்ன என நன்றாக உணர்ந்தவன் என்பதால் அதிகம் பாதித்தது “சூரரை போற்று” திரைப்படம்.. என்னதான் ஏழை கனவு வென்றாலும் இறுதியில் பணக்காரன் அதை பிடுங்கிகொள்கிறான். இதுதானே உண்மை என மிகவும் உருக்கத்துடன் உண்மையை கூறியுள்ளார். இந்த பதிவிற்கு சூர்யா நன்றி கூறியுள்ளார்.