லொஸ்லியாவின் தந்தை அச்சு அசலாக சேரன் போலவே இருக்கிறாரே.! வைரலாகும் புகைபடம்

0

Losliya Father Photo : விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்துவிட்டது, இந்த நிலையில் வனிதா இருந்தவரை பிக்பாஸில் சண்டைகள் இருந்தன ஆனால் இப்பொழுது ரொமான்ஸ் மற்றும் காதல் தான் அதிகமாக இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் லாஸ்லியா இவர் பிக் பாஸில் இருக்கும் சேரனை நீங்கள் எனது அப்பா போல் இருக்கிறீர்கள் என அடிக்கடி கூறியுள்ளார். அது நிஜம் என தற்போது தெரிய வந்துள்ளது, பிக் பாஸ் வீட்டில் பல போட்டியாளர்கள் இருந்தாலும் சேரனும்னிடம்தான் லொஸ்லியா அன்பாக பழகி வருகிறார்.

இதற்கான காரணத்தை லொஸ்லியா அடிக்கடி கூறியுள்ளார், அவர் கூறியதாவது தனது அப்பாவும் சேரனும் ஒரே சாயலில் இருப்பதால் இவரை பார்த்தால் எனக்கு என்னுடைய அப்பா ஞாபகம் வருகிறது என கூறியுள்ளார், இந்த நிலையில் லொஸ்லியா அப்பாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சேரனும் லொஸ்லியாவின் தந்தையும் ஒரே மாதிரி இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.