முக்கிய வீரரை மிஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – இந்த தடவையும் அவர் இல்லையாம்..

0
CSK-
CSK-

இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய டோரண்ட்மெண்ட் ஐபிஎல்.  இது சீசன் சீசன்னாக நடைபெற்று வருகிறது இதுவரை 15 சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 16 வது சீசன் வெகுவிரைவிலேயே ஆரம்பிக்க இருக்கிறது. ஒவ்வொரு சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே..

ஒவ்வொரு அணியும் முக்கியமான வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மிதி வீரர்களை ரிலீஸ் செய்யும், ஒரு சில வீரரை மாற்றிக் கொள்வது வழக்கம்.. அந்த வகையில் இந்த வருடம் முக்கியமான எட்டு வீரர்களை தக்கவைத்துக் கொண்டு மீதி வீரர்களை செய்யுமாறு ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக்கொண்டது அதன்படி ஒவ்வொரு அணியும்..

முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொண்டு மீது வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது ஒரு சில வீரர்களை மற்ற அணிகளிடம் பேசி மாற்றிக் கொண்டும் வருகின்றனர் அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனி, ஜடேஜா, தீபக் சஹர், முகேஷ் சவுத்ரி, சிவம் டுபே, மொயின் அலி, ருத்ராஜ், கான்வே போன்ற வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. மீதி வீரர்களை ரிலீஸ் செய்ய உள்ளது.

ஏலத்திற்கு முன்பாகவே மற்ற அணிகளிடம் பேசி வீரர்களை மாற்றிக் கொள்ளவும் ஐபிஎல் அனுமதி உள்ளது. அந்த வகையில் 2018  லிருந்து  2021 ஆண்டு வரை சென்னை அணிக்காக சூப்பராக விளையாட ஷர்தல் தாகூரை டெல்லி அணியிடமிருந்து  மாற்றிக்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேச்சுவார்த்தை நடத்தியது.

இதே போல  கொல்கத்தா, குஜராத், பெங்களூரு அணிகள் ஷர்துல் தாகூரை வாங்க  போட்டி போட்டனா இருப்பினும் கொல்கத்தா அணி ஷர்துல் தாகூரை எப்படியோ வாங்கி விட்டது. இந்த தடவையும் சென்னை அணி அவரை கைப்பற்ற முடியாமல் போனது இருந்தாலும் வருகின்ற ஏலத்தில் ஒரு சிறந்த பந்து வீச்சாளர்களை  குறிவைத்து தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..