சென்னையில் பிரபல திரையரங்கிற்கு வலிமை படத்தை பார்க்க வந்த ஹீமா குரோஷி கார்த்திகேயா போனி கபூர்.! வைரலாகும் புகைப்படம்

வலிமை திரைப்படம் இன்று அதிகாலையில் பல இடங்களில் திரையிடப்பட்டது இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் திரைப்படத்தை காண்பதற்காக அதிகாலை காட்சிக்காக திரையரங்க வாசலில் காத்துக் கொண்டிருந்தார்கள். அதற்குக் காரணம் வலிமை திரைப்படம் இரண்டு வருடங்களாக  வெளியிடாமல் இருந்து வந்தது.

வலிமை திரைப்படத்தை இயக்குனர் வினோத் அவர்கள் இயக்கிய உள்ளார் போனி கபூர் தயாரித்துள்ளார். ஆரம்பத்தில் வலிமை திரைப்படத்தின் டைட்டில்  அறிவித்த படக்குழு அதன்பிறகு எந்த ஒரு அப்டேட் செய்தியையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட வில்லை இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே வலிமை திரைப்படத்தின் அப்டேட்டை கொடுத்து வந்தார்கள் படக்குழு.

இந்த நிலையில் அதிகாலை காட்சியைக் காண பல பிரபலங்கள் டிக்கெட் வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் வலிமை திரைப்படத்தில் காண்பதற்காக போனிகபூர் காரில் வந்தார் அப்பொழுது அஜித் ரசிகர்கள் பலரும் பாலபிஷேகம் செய்து அவரை வரவேற்றார்கள்.

இதன் நிலையில் சென்னையில் பிரபல திரை அரங்கமான ரோகிணி திரையரங்கில் முன்னணி நடிகர்களின் திரைப் படங்களை திரையிடும் போது பல பிரபலங்கள் படத்தைக் காண வருவது வழக்கம் அந்த வகையில் வலிமை திரைப்படத்தை காண்பதற்காக ரோகிணி திரையரங்கிற்கு திரைப்படத்தில் நடித்த ஹிமா குரோஷி மற்றும் வலிமை திரைப்படத்தின் வில்லன் கார்த்திகேய வந்துள்ளார்.

போனிகபூர் ஹீமா குரோஷி கார்த்திகேயா என அனைவரும் வலிமை திரைப்படத்தை சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் கண்டு களித்து உள்ளார்கள். அதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Leave a Comment