சென்னை கத்திபார மேம்பாலத்தில் கோர விபத்து.! தலை நசுங்கி காவலர் இறந்தார்

0
dead
dead

போக்குவரத்து உதவி ஆய்வாளர் தனது பணி முடிந்த பிறகு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது லாரி மோதி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தாம்பரம் சானடோரியம் துர்கா நகரில் வசிக்கும் நடராஜ் 56 வயது இவர் பரங்கிமலை போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார், சென்னையில் குடியரசுத் தலைவர் வருகையால் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது அதற்காக நந்தம்பாக்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலந்து கொண்டார், இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு காலை 11. 30 மணிக்கு தனது வீட்டிற்கு திரும்பினார்.

தனது டூவீலரில் வந்து கொண்டிருந்த நடராஜ் கிண்டியை அடுத்து கத்திபாரா மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தார், அதே திசையில் வந்த சிமெண்ட் கலவை கலக்கும் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது அப்போது எதிரில் இருந்த ஆட்டோவை ஓரங்கட்டி விட்டு அந்த லாரி பூந்தமல்லி வளைவில் திரும்பியது அப்போது நேராக வந்து கொண்டிருந்த நடராஜ் வாகனம் லாரி மீது மோதியது அப்பொழுது அவர் தலையில் இருந்த ஹெல்மட் துண்டாக நொறுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தலை நசுங்கி உயிரிழந்தார் நடராஜ்.

இந்த சம்பவத்தை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அந்த லாரியை கவனக்குறைவாக ஓட்டி வந்த சதீஷ் என்பவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்துள்ளார்கள்,.