சென்னையில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் இதோ லிஸ்ட்.!

0

ஒரு படம் வெற்றி பெறுகிறது என்றால் அது வசூலைப் பொறுத்து தான் தீர்மானிக்க முடியும், அந்த வகையில் வருடத்திற்கு 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் ரிலீசாகின்றன, பொதுவாக திரைப்படங்களை வார இறுதியில் தான் ரிலீஸ் செய்வார்கள் ஏனென்றால் அப்போதுதான் விடுமுறை நாள் வரும் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் வரும் என்பதனால்.

அப்படி வார இறுதியில் இரண்டுக்கும் அதிகமான படங்கள் வெளியானால் அது போட்டியில்தான் முடியும், அந்த வகையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நான்கு திரைப்படங்கள் வெளியாகின, யோகி பாபு நடித்த கூர்க்கா, ஜீவா நடித்த கொரில்லா, விக்ராந்த் நடித்த வெண்ணிலா கபடி குழு-2, போதை ஏறிய புத்தி மாறி ஆகிய திரைப்படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸாகின.

இந்த நிலையில் ஹிந்தியில் ரித்திக் ரோஷன் நடித்து இருக்கும் சூப்பர் 30 திரைப்படமும் ரிலீஸாகின, தமிழில் முதல் மூன்று திரைப்படங்கள் அதாவது கூர்க்கா, கொரிலா,வெண்ணிலா கபடி குழு ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன இந்தத் திரைப்படங்களில் முதல் நாள் வசூல் என்ன என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. சூப்பர் 30 – 15 லட்சம், கொரிலா – 13 லட்சம், கூர்கா – 8 லட்சம், வெண்ணிலா கபடி குழு 2 -7 லட்சம்.