பிஸ்ட் தூக்கி பின்னாடி போடு KGF யை தூக்கி முன்னாடி போடு.! சென்னையில் பிரபல திரையரங்கம் அதிரடி..!

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ரசிகர்கள் பலரும்  இது விஜய் படம் போல் இல்லை எனவும் நெல்சன் திரைப்படம் போல் இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

விஜய்யை நெல்சன் வச்சு செய்துவிட்டார் நெல்சன் இதுபோல் செய்தீர்கள் பெரிய ஸ்டார் என்று உங்களுக்குத் தெரியாதா எப்படி படத்தை கொடுக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா என பலரும் நெல்சனை பார்த்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று  கேஜிஎப் இரண்டாவது பாகம் திரைக்கு வந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் யாஷ் நடித்துள்ளார் பிரசாந்த் நில் படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் பீஸ்ட் திரைப்படம் கேஜிஎப் திரைப்படத்திற்கு ஈக்குவல் ஆக இருக்கும் என பலரும் எதிர்பார்த்த திரையரங்கிற்கு வந்து ஏமாற்றத்தை தான் சந்தித்தார்கள்.

அதேபோல் தமிழகத்தில் கேஜிஎஃப் திரைப்படத்திற்கு 250 திரையரங்கில் மட்டுமே கிடைத்தது ஆனால் தற்பொழுது நிலை தலைகீழாக மாறியுள்ளது kgf திரைப்படத்திற்கு திரையரங்குகள் அதிகரித்த வந்தவண்ணம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் இரண்டாவது மூன்றாவது ஸ்கிரீனில் தான் கேஜிஎப் திரைப்படம் திரையிட்டு வந்தார்கள்.

இந்தநிலையில் பீஸ்ட் திரைப்படம் முதல் திரையில் வெளியானது ஆனால் தற்போது நிலைமையை புரிந்து கொண்ட திரையரங்க உரிமையாளர்கள் அதிரடியாக மாற்றத்தை செய்துள்ளார்கள் அதாவது சென்னையில் பிரபல திரையரங்கமான ரோகிணி திரையரங்கத்தில் முதல் திரையில் ஓடிக்கொண்டிருந்த பீஸ்ட் திரைப்படத்தை இரண்டாவது திரையில் போட்டுவிட்டு கேஜிஎப் திரைப்படத்தை முதல் திரையில் போட்டுள்ளார்கள்.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வைரலாகி வருகிறது.

Leave a Comment