சென்னையில் பிரபல ஹோட்டலில் புளித்துப்போன பிரியாணி, கெட்டுப்போன இறைச்சி சீல் வைத்த அதிகாரிகள்.! இர்பான் வீடியோவை கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0

யூடியூபில் பல்வேறு பிரபலங்களும் மிகவும் பிரபலமாகி கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் உணவு விமர்சகர் இர்பான் அவர்களை தெரியாதவர்கள் இருக்க முடியாது அந்த வகையில் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டலுக்கு சென்று அங்கு உள்ள உணவுகளை சாப்பிட்டு பார்த்துவிட்டு விமர்சனம் கூறுவது டேஸ்ட் பற்றி கூறுவது உணவின் தரத்தை குறித்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார்.

அவ்வாறு வெளியிடுவதால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் இவர் பல்வேறு ஊர்களுக்குச் சென்று அங்குள்ள ஸ்பெஷல் சாப்பாடுகளை சாப்பிட்டுவிட்டு தனது கருத்தை தெரிவித்து வந்தார். இந்த நிலையில் உணவு விமர்சகர் இர்ப்ஃபான் அவர்களிடம் வீடியோவிற்கு கீழ் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களையும் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் சென்னையில் உள்ள தாம்பரம் சோலையூர் சாலையில் அமைந்துள்ளது காரைக்குடி பிரியாணி பிரதர்ஸ். இந்த ஹோட்டலில் திடீர் என உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வை நடத்தினார்கள் அப்பொழுது ஒரு நாளுக்கு முன் சமைத்த பிரியாணி அண்டாவை ஃப்ரிட்ஜில் வைத்து அதை சூடேற்றி வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி உள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இஞ்சி, பூண்டு மஞ்சள், மிளகாய் பொடி, அப்படியே கிடக்கிறது அதுமட்டுமில்லாமல் இறைச்சியை நீண்ட நாள் பிரிட்ஜில் வைத்து துர்நாற்றம் வீசிய சிக்கன் ஏராளமாக வைத்திருக்கிறார்கள்.

மேலும் ஒரு நாளைக்கு முன்பே அவித்த 50 முட்டைகளையும் பிரிட்ஜில் வைத்து இருக்கிறார்கள். கெட்டுப்போன 45 கிலோ பிரியாணி, தரமற்ற சிக்கன் மட்டன் மீன் ஆகியவைகளை வைத்து சமையல் செய்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி உள்ளார்கள் இதனை கண்டுபிடித்த உணவு பாதுகாப்பு அதிகாரி ஓட்டலுக்கு சீல் வைத்து பூட்டு போட்டுள்ளார்.

இப்படி இந்த ஹோட்டலில் ஆர்டர் செய்து இர்ஃபான் சாப்பிட்டுவிட்டு அதற்கு நல்ல ரிவ்யூ கொடுத்துள்ளார் அதனால்தான் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள் இருப்பான் அவர்களை.