கட்டுப்பாட்டை மீறிய மக்கள் அபராதம் மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா.! அதிரடி காட்டும் போலீஸ்

தற்ப்பொழுது கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் தலைவிரித்து ஆடுவதால் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டு உள்ளது. அதிலும் முக்கியமாக நம் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா கோடிக்கணக்கான மக்களை அழித்து வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது தமிழகம் முழுவதும் மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில் காலை 12 மணி வரையிலும் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்து இருக்கும் என்று முதலில் கூறி இருந்தார்கள் ஆனால் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதாலும் மக்களின் நடமாட்டமும் அதிகரிப்பதாலும் 10 மணியாக குறைத்துள்ளார்.

அந்தவகையில் பெருநகர் சென்னையிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது அதிசயம் இன்றி வெளியில் வரக்கூடாது அப்படி சுற்றி திரியும் பலரையும் போலீசார் விரட்டி அடித்து வருகிறார்கள். இந்நிலையில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிந்த 2136 வாகனங்களை பறிமுதல் செய்து உள்ளார்கள். அதோடு ஆயிரத்து 1521 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் படி சென்னையில் சோதனைச் சாவடிகள் அமைத்து சரக காவல் குழுவினர்கள் மூலம் தடையை மீறிய முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிபவர்கள் பிடித்து வருகிறார்கள்.அதோடு தனி மனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டு வருகிறது.

police 1
police 1

எனவே காவல்துறையினரும் மிகவும் கடுமையாக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதோடு பல போலீசார்களும் புதிதாக களம் இறங்கியுள்ளார்கள். அத்தியாவசியமாக வெளியில் வந்த வாகனங்கள்  1334 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 235 இருசக்கர வாகனங்கள், 9 ஆட்டோக்கள், 2 இலகுரக வாகனம் உள்ளிட்ட மொத்தம் 246 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக 6 லட்சத்து 67 ஆயிரம் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.  அதோடு பல கடைகளில் மீதும் வழக்கு செய்யப்பட்டு ரூபாய் 8 லட்சத்து 59 ஆயிரத்து 200 அவதாரம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்கள்.

Leave a Comment