சென்னை பாக்ஸ் ஆபிஸ் : ரஜினியின் 2.0 படத்தின் வசூலை முறியடித்த “ஜெயிலர்”

Jailer : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72 வயதிலேயும் படம் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி 4000 -த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

ரீலிஸ்க்கு முன்பாகவே  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர், காவாலா பாடல், ஹுக்கும் பாடல் போன்றவை படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இதனால் மக்கள் அனைவரும் டிக்கெட் புக்கிங் போட்டி போட்டுக் கொண்டு பதிவு செய்தனர் படம் வெளிவந்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.

ரஜினியின் மாறுபட்ட நடிப்பு பலரையும் கவர்ந்து விழுந்தது. மேலும் யோகி பாபு ரஜினி காமெடி, விநாயகத்தின் ரவுடிசம் என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் இளசுகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார் படமும் தமிழ்நாட்டையும் தாண்டி அனைத்து இடங்களிலும் நல்ல வசூலை அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறது.

இதுவரை மட்டுமே ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 550 கோடி உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன இந்த நிலையில் ஜெயில்ர் திரைப்படம் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறது அந்த வகையில் 2.0 வசூலின் சாதனையை முறியடித்து உள்ளது ஜெயிலர் அது குறித்து விலா வாரிபார்ப்போம்..

சென்னை பாக்ஸ் ஆபிஸில் ரஜினியின் 2.0 திரைப்படம் 25.21 கோடி வசூல் செய்து இதுவரை முதலிடத்தில் இருந்தது. தற்பொழுது அதை பீட் பண்ணி உள்ளது ரஜினியின் ஜெயிலர் சென்னை பாக்ஸ் ஆபிஸில் தற்பொழுது நிலவரப்படி ஜெயிலர் 25.26 கோடி வசூல் செய்து நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது.

 

Leave a Comment