ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னாட்களில் ரஜினி உடனே ஹீரோயினாக நடித்து அசத்தியவர் நடிகை மீனா. முத்து திரைப்படத்தின் மூலம் நடிகை மீனா, ரஜினிக்கு ஹீரோயினாக நடித்து அசத்தினார். முதல் படமே மீனாவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்ததால் தமிழ் சினிமா உலகை தாண்டியும் இவர் தென்னிந்திய சினிமாவில் பேசுபொருளாக மாறினார் தொடர்ந்து அவருக்கு அடுத்த படமும் கிடைத்தது.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த விஜயகாந்த், அர்ஜுன், சரத்குமார், சத்யராஜ், கமல் போன்ற பல்வேறு ஜாம்பவான்கள் உடன் இணைந்து தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் சினிமாவில் பெரும்பாலும் இழுத்துப் போட்டுக்கொண்டு தான் நடித்தார் மீனா. ஆனால் கதை களத்துக்கு ஏற்றவாறு அவ்வப்போது கவர்ச்சி காட்டி ரசிகர்களை வளைத்துப் போடுவது மீனாவுக்கு கைவந்த கலை.
டாப் நடிகர்களுடன் நடித்து கொண்டிருந்தாலும் அப்போதைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த அஜித், விஜய் ஆகியோரின் படங்களிலும் நடித்தார் ஒரு கட்டத்தில் அவர்களுடன் நடிக்க நடிகை மீனா பெரிதும் ஆசைப்பட்டாலும் அந்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அசுர வளர்ச்சியை எட்டிய மீதான ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி அதை உணர்ந்த பிறகு திடீரென திருமணம் செய்து கொண்டார் மீனா.
இவரை தொடர்ந்து அவரது மகள் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் மீனா ரஜினியின் அண்ணாத்த படத்திற்காக தற்போது இவர் நடித்து வருவது அந்த படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
நடிகை மீனா சினிமாவில் கதாபாத்திரத்தில் ஏற்றவாறு நடிப்பதும், நடனத்திற்கு ஏற்றவாறு தன்னை முற்றிலும் மாற்றி கொள்வது மீனாவுக்கு பிடிக்கும் அப்படித்தான் பாடல் என்றால் அதில் தனது வளைவு நெளிவை அழகாக காட்டி ரசிகர்களை அசத்துவார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை மீனா பேசும்போது வெளிநாட்டிலிருந்து ஒருவர் வந்து முரளியும் நீங்களும் இணைந்து நடித்த இரணியன் படத்தில் சீ போயா நீ ரொம்ப மோசம்.. நீ தொட்டா உடம்பு கூசும் அந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். தினமும் ஒரு தடவையாவது எப்படியாவது கேட்டு விடுவேன் என சொன்னார் அச்செய்தியை பேட்டியில் குறிப்பிட்டார் மீனா.
