பிகில் பட நடிகை விட்டில் போரடிக்காமல் இருக்க என்ன செய்கிறார் பாருங்கள்.! வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை வர்ஷா பொல்லம்மா. இவர் தமிழ் திரை உலகில் 2015 ஆம் ஆண்டு சதுரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதுவே அவருக்கு முதல் படமாகவும் அமைந்தது. இதனை தொடர்ந்து அவர் வெற்றிவேல், 96, பெட்டிகடை திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இருப்பினும் சினிமா துறையில் அவரால் பிரபலமடையவில்லை. இந்தநிலையில் 2019-ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் பிரபலமடைய தொடங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தற்போது தெலுங்கு பக்கம் திசை திரும்பி உள்ளார்.

தற்போது ஜானு ,சூஸி சூண்டங்காணே போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வபொழுது தனது க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருவார்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வீட்டிலேயே முடங்கி உள்ளார் வர்ஷா பொல்லம்ம போரடிக்காமல் இருப்பதற்காக சூரியனை திண்பது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இழுத்து வருகிறார் இதனை பார்த்த ரசிகர்கள் என்ன அழகுடா என கூறிவருகின்றனர்.

Leave a Comment