அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்கும் குஷ்பு தன்னை அழகு படுத்திக் கொள்ள என்ன செய்கிறார் பாருங்கள்.

90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் 1988ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் கிழக்குவாசல் ,நடிகன், மன்னன், பாண்டியன், அண்ணாமலை, சின்னதம்பி, வெற்றி விழா போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் ஆரம்பத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் வெகு சீக்கிரமாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் இருப்பினும் இதற்காக அவர் சற்று கவர்ச்சியை காட்டி நடிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் ஒரு வலம் வந்தார் இந்த நிலையில் திடீரென இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து படிப்படியாக விலகினார்.

தற்பொழுது அவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இருப்பினும் இவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் நீங்கள் இந்த வயதிலும் இளமையாக தான் இருக்கிறீர்கள் சினிமாவில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறி வந்தனர் இருப்பினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் திடீரென தமிழ் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

அந்த வகையில் தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கின்ற அண்ணாத்த என்ற திரைப்படத்தில் தற்போது குஷ்பு அவர்களும் கமிட்டாகியுள்ளார் இவரைத் தொடர்ந்து நயன்தாரா ,மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி போன்ற நட்சத்திர பட்டாளங்கள் பலரும் இப்டத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது இப்படத்தை சிறுத்தை சிவா அவர்கள் இயக்குகிறார்.

தற்போது இந்த படத்தில் மீனா நடித்த உள்ளதால் தனது உடல் எடையை குறைத்து தற்போது இளம் நடிகை போல் காணப்படுகிறார் இந்த நிலையில் குஷ்பு அவர்களும் படத்திற்காக தனது அழகை மேம்படுத்தி வருகிறார் அந்த வகையில் தற்போது தனது அழகை மெருகேற்ற அவர் மஞ்சளைக் கலந்து தனது முகத்தில் தடவி உள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது இதனைப் பார்த்த நெட்டிசன்கள் மஞ்சள் தடவிய லிப்ஸ்டிக்கை ஏன் போட்டு இருக்கிறார்கள் என கலாய்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

kusboo
kusboo
kusboo
kusboo
kusboo
kusboo

Leave a Comment