தல 60 படத்தின் லேட்டஸ்ட் நியூஸ் : அஜித்திற்கு ஜோடியாக நடிக்க போகும் ஸ்டார் நடிகை.? இப்போவே கொண்டாடும் தல ரசிகர்கள்.

தமிழ் உலகில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வெற்றி நடைபோட்டு வருபவர் தல அஜித். தல அஜித்தை எப்பொழுதும் சினிமாவையும் தாண்டி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு தன்னால் முடிந்த பல நலத்திட்ட உதவிகளை செய்து பாசத்தை சம்பாதித்தார்.

அதற்கு கைமாராக ரசிகர்களும் தல அஜித்தின் படங்கள் வெற்றி தோல்வியாக இருந்தாலும் அதை கொண்டாடி தீர்த்தனர். மேலும் அஜித்திற்கு ஊக்கம் அள்ளித்து அடுத்த வெற்றி பெற ரசிகர்கள் அன்பை வெளிபடுத்தினார்

இதனால் வருடத்திற்கு ஒரு படத்தையாவது கொடுத்து ரசிகர்களுக்கு நல்ல தீனி போடுவது அஜீத்தின் வழக்கம் ஆனால் தற்போது இவர் நடித்து வரும் அஜித்தின் வலிமை படம் சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாகியும் வெளியே வராததால் அஜித் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் கடுப்பாகி பார்ப்பவர்களை எல்லாம் வலிமை படம் எப்போது வெளிவரும் என தகவல் மற்றும்  ஒரு அப்டேட் ஏதாவது சொல்லுங்கள் என புலம்ப ஆரம்பித்தனர்.

பட குழு தனது அப்டேட்டை சரியாக வெளியிட விட்டாலும இதில் படத்தில் பணியாற்றியவர்கள் பலரும் சில புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆனந்தத்தை கொடுத்தனர். வலிமை படம் ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் இதனை அடுத்து தல அஜித்த்துடன் மூன்றாவது முறையாக ஹச். வினோத் இணைய உள்ளார்.

இதற்காக தற்போது நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகின்றனர் அந்த வகையில் அடுத்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக யார் நடிப்பது என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவை தான் தற்போது படக்குழு குறி வைத்துள்ளது.

அஜித் படம் என்றால் சும்மாவே ஓடும் வரும் நயன்தாரா இந்த திரைப்படத்தில் மட்டும் விதிவிலக்கா என்ன அஜித்தின் அடுத்த படத்திற்கு  ஓகே சொல்வார் என கூறப்படுகிறது. விரைவில் இந்த திரைப்படத்தில் அவர் இணைவார் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் சொல்லப்படும் என கோலிவுட் வட்டாரத்தில் இருந்து கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version