பொதுவாக சினிமாவில் திரைப்படங்களில் நன்றாக நடித்துவிட்டு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சீரியல்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் 2007ம் ஆண்டில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்வேதா. பிறகு 2008ஆம் ஆண்டிலேயே இவருக்கு வாசுகி திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து பல படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.

இதனை தொடர்ந்து சின்னத்திரையில் மகள், நிலா போன்ற இன்னும் சில சீரியல்களிலும் நடித்து வந்தார்.தற்பொழுது கடந்த ஐந்து வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சந்திரலேகா சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் 1500 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஸ்வேதா மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களையும், வல்லவன் திரைபடத்தில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சீரியல் நடிகை ஸ்வேதாவா இது என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.
