சந்திரமுகி : ஜோதிகா மேடம் படத்துல பாசிட்டிவ் இல்லையா வெறும் நெகட்டிவ் விமர்சனமா எழுதுறிங்க.? வேட்டையனின் சேட்டை.

Chandramukhi : பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்,கங்கனா ரனாவத், சரத்குமார், வடிவேலு, லட்சுமிமேனன், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, என பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் சந்திரமுகி 2. இந்த திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. சந்திரமுகி இரண்டாவது பாகத்தை பார்த்த பல ரசிகர்கள் முதல் பாகத்தில் நடித்த ரஜினிகாந்த் ஜோதிகா நயன்தாரா ஆகியோர் நடிப்பிற்கு இணையாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சந்திரமுகி 2 வெளியான நிலையில் சந்திரமுகி முதல் பாகத்தில் அந்த திரைப்படம் ஒரு பேய் திரைப்படம் என்பதற்கான பல விஷயங்கள் வைத்திருந்தார் ஆனால் அந்த காட்சிகளை இயக்குனர் பி வாசு கடைசி நேரத்தில் டெலிட் செய்து விட்டார் என டெலிட் ஆன காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வந்தது இந்த நிலையில் சந்திரமுகி திரைப்படத்தின் போது ஷூட்டிங் ஸ்பாட் காட்சி ஒன்றும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சந்திரமுகி திரைப்படம் ஏற்கனவே மலையாளம் கன்னடத்தில் வெளியான திரைப்படம் தான் இதுதான் தமிழில் சந்திரமுகி என ரீமிக்ஸ் செய்தார்கள் இந்த திரைப்படத்தை வாசு தான் இயக்கியிருந்தார் ரஜினிகாந்த் ஒரு பேப்பரை கொடுத்து ஜோதிகாவிடம் இந்த திரைப்படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் களை எழுத வேண்டும் என கொடுத்துள்ளார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள அனைவரும் எழுதிக் கொடுத்து இருக்கிறார்கள் நீங்களும் கட்டாயம் எழுத வேண்டும் எனக் கூற சூப்பர் ஸ்டார் ரஜினியே சொல்லிவிட்டார் என ஜோதிகாவும் ஒட்டுமொத்த நெகட்டிவ் பாய்ண்டுகளையும் கடைசி பேப்பர் வரை எழுதி வைத்து விட்டார் இதனை காபி வித் டிடி பெட்டியில் ஜோதிகா அவர்களே கூறியிருந்தார்.

அந்த வீடியோவில் ஜோதிகா கூறியதாவது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே அப்பொழுது பிராங்க் செய்துள்ளார். ஜோதிகா எழுதிக் கொடுத்த நெகட்டிவ் பாய்ண்டுகளை பி வாசு அவர்களிடம் காமித்து எவ்வளவு நெகட்டிவ் எழுதி இருக்காங்க பாருங்கள் என சொல்ல சூட்டிங் ஸ்பாட்டில் யாருமே எழுதவில்லை ரஜினி தன்னை மட்டும் எழுத சொல்லி பிராங் செய்தார் எனவும் சிரித்துக் கொண்டே ஜோதிகா கூறினார்.