“சந்திரமுகி – 2” படத்தின் ஹீரோயின் இவரா.? அப்ப படத்துல த்ரிஷா கிடையாதா..

0
chandramuki-2
chandramuki-2

எஸ் பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி அதன் இரண்டாவது பாகம் பல்வேறு தடைகளை தாண்டி பல வருடம் கழித்து ஒரு வழியாக தற்பொழுது உருவாக இருக்கிறது ஆனால் ரஜினிக்கு பதிலாக இந்த படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ்..

நடிக்க மற்றும் பல புது முக மற்றும் திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளை ஒவ்வொருவராக படக்குழு இழுத்து வருகிறது. முதல் பாகம் போலவே இந்த பாகத்தையும் ஒரு பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு படம் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை மிகப் பிரமாண்ட பொருள் செலவில் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. பி வாசு தனக்கே உரிய பாணியில் இந்த படத்தை எடுக்க இருக்கிறார். ராகவா லாரன்ஸ் வடிவேலு போன்றோர் இந்த படத்தில் நடிக்கின்றனர் மற்றபடி இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்து வந்தது.

ஆனால் ஒரு சில பெயர்கள் அடிபட்டன அந்த வகையில் திரிஷா,ஆண்ட்ரியா, ஜோதிகா, ராசி கண்ணா போன்றவர்கள் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த மூவரில் திரிஷா தான் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக  சொல்லப்பட்டது ஆனால் தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால்..

laxmi menon
laxmi menon

இந்த படத்தில் திரிஷா நடிக்கவில்லை ஹீரோயினாக தேர்வாகி உள்ளது நடிகை லட்சுமிமேனன் என சொல்லப்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் நடிப்பதால் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு கம்பேக் திரைப்படமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.