சந்திரமுகி 2 முதல் பாதி எப்படி இருந்தது தெரியுமா.! இதோ எக்ஸ் தலம் விமர்சனம்.!

Chandramukhi 2 : ராகவா லாரன்ஸ் கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஸ்டி டாங்கே, விக்னேஷ், ராவோ ரமேஷ் ஆகியோர் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் சந்திரமுகி 2. இதன் முதல் பாகத்தில் ரஜினி ,ஜோதிகா நயன்தாரா, பிரபு, வடிவேல் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர் இடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் இரண்டாவது பாகத்தை பல வருடங்களுக்கு பிறகு p வாசு இயக்கியுள்ளார்.

மேலும் கங்கனா ரனாவத் படத்தில் நடன கலைஞராகவும் சந்திரமுகி பேய் வேடத்திலும் மிரட்டி உள்ளார் இந்த நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் பாதி எப்படி இருந்தது என தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளார்கள்.

அதில் ஒரு ரசிகர் ஃபர்ஸ்ட் பாதி வெறித்தனமாக இருந்ததாகவும் வடிவேலு மீண்டும் அவரது இடத்தை பிடித்து விட்டார் எனவும் கங்கனா ரனாவத் அவர் ராணி போல் இருந்ததாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு ரசிகர் வடிவேலு சார் காமெடி அற்புதமாக இருந்ததுள்ளது ராகவா லாரன்ஸ் நடிப்பு மிரட்டலாக இருந்ததாகவும் மகிமா நம்பியார் கியூட்டாக நடித்துள்ளார். எனவும் இடைவெளி காட்சி வெறித்தனமாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் கீரை வாணி பின்னணி இசையில் மிரட்டி விட்டார் எனவும் கூறியுள்ளார்

மேலும் ஒரு ரசிகர் முழுக்க முழுக்க ஃபேமிலி திரைப்படம் எனவும் ஃபேமிலி அனைவரும் இந்த திரைப்படத்தை பார்க்கலாம் எனவும் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.